Saturday, May 4, 2024
Home » நாட்டில் 56,000 சிறுவர்கள் மந்தபோசணை நிலையில்

நாட்டில் 56,000 சிறுவர்கள் மந்தபோசணை நிலையில்

பாராளுமன்ற மேற்பார்வைக்குழு தெரிவிப்பு

by damith
October 16, 2023 8:20 am 0 comment

நாட்டில் 56,000 சிறுவர்கள் கடும் மந்த போசன நிலையில் காணப்படுவதாக யுனிசெப் அறிக்கையை சுட்டிக்காட்டி பொருளாதார நெருக்கடியை நிவர்த்திசெய்வதற்கான பாராளுமன்ற மேற்பார்வைக்குழு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் உலக உணவு வேலைத்திட்டத்தின் புதிய அறிக்கைக்கிணங்க, இலங்கையிலுள்ள குடும்பங்களின் 1/3 பங்கு பாதுகாப்பான உணவு முறைமையை கொண்டிருக்கவில்லையென்றும் அத்துடன் 70% மான குடும்பங்கள் ஒரு நேர உணவை தவிர்த்து வருவதாகவும் அந்த குழுவின் தலைவர் காமினி வலேபொட எம்.பி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி அழுத்தங்களை நிவர்த்திசெய்வது தொடர்பான மேற்பார்வை குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தில் மேற்படி குழு கூடியுள்ளது. பல்வேறு காரணங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ள அந்த குழுவில் மேற்படி தகவல்கள் வெ ளியிடப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது போதியளவு உணவு கிடைக்காத பெருமளவு பிள்ளைகள் உடலில் கையிருப்பாகவுள்ள உணவு சக்தியுடன் வாழ்வதாகவும் எனினும் அவர்கள் எதிர்காலத்தில் பெரும் போசணை குறைபாட்டு விளைவுகளை எதிர்நோக்க நேருமென்றும் மருத்துவத்துறை சுட்டிக்காட்டுவதாகவும் அந்தக் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT