Friday, May 3, 2024
Home » ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் இன்று வெளியானது

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் இன்று வெளியானது

- ரூ.300 கோடி செலவு, ரூ.543 கோடி விற்பனை

by Prashahini
September 7, 2023 3:08 pm 0 comment

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று (07) உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஃபேன், ஜீரோ உள்ளிட்ட படங்கள் ஃபிளாப் ஆன நிலையில், நடிகர் ஷாருக்கான் சுமார் 4 ஆண்டுகள் சினிமாவுக்கே ஓய்வு கொடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்ய ஆரம்பித்தார். அதன் விளைவாக இந்த ஆண்டு வெளியான பதான் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் வெற்றியை கொடுத்தது. இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் வெளியாகி உள்ள ஜவான் திரைப்படம் 4.4 ஸ்டார் ரேட்டிங் என்றும் பிளாக்பஸ்டர் என்றும் ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தியா முழுவதும் Imax மற்றும் 4DX வடிவங்களில் வெளியாகி உள்ளது.

சுமார் ரூ.300 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் விக்ரம் ரத்தோர், ஆஸாத் ரத்தோர் என இரண்டு பாத்திரங்களில் நடித்திருக்கிறார் ஷாருக்கான்.

காளி என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அவர் தவிர, நயன்தாரா, ப்ரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தற்போதுவரை இந்தியா முழுவதும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்கள் விற்பனையாகியிருக்கும் என கருதப்படுகிறது. இந்தப் படம் ரூ.543 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் 65 – 70 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT