Saturday, May 11, 2024
Home » E-Government: முழுமையான இணையவழி அரசாங்கத்தை நோக்கிய சவூதி அரேபியாவின் நகர்வு

E-Government: முழுமையான இணையவழி அரசாங்கத்தை நோக்கிய சவூதி அரேபியாவின் நகர்வு

by Rizwan Segu Mohideen
September 3, 2023 5:13 pm 0 comment

சவூதி அரேபியா ஒரு எண்ணெய் வளமுள்ள நாடு. அதன் பொருளாதாரம் எண்ணெய் வளத்தில் தங்கியுள்ளதால் உலக சந்தையில் எண்ணெயின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப சவூதி அரேபியாவின் பொருளாதாரத்திலல தாக்கம் ஏற்படுகிறது. 2016 சவூதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் தலைமையில் வகுக்கப்பட்ட 2030 நோக்கம் இன்று வரை படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டுவகிறது.

அதன் பிரதான இலக்கு சவூதி அரேபியாவை ஒரு எண்ணை சார்ந்த பொருளாதார நாடாக மாத்திரமன்றி ஏனைய பொருளாதார துறைகளிலும் முன்னேற்றமடைந்த ஒரு நாடாக மாற்ற வேண்டும் என்பதாகும். அது மாத்திரமின்றி உலக வர்த்தக கேந்திர நிலையமாக சவூதி அரேபியா விளங்க வேண்டும் என்பதும் பிரதான நோக்கமாகும்.

இதற்காக சவூதி அரேபியா உற்பத்தி, தொழில்நுட்பம், கல்வி கலாச்சார முன்னேற்றம், ஏற்றுமதி இறக்குமதி, விவசாயம், உல்லாசம், கலைகளை ஊக்குவித்தல் போன்ற துறைகளில் துரித வளர்ச்சி கண்டுள்ளது. அவைகள் மூலம் சவூதி அரேபியா அதன் 2030 பிரதான இலக்கை அடைவதற்கு நெருங்கியிருக்கிறது.

இவற்றில் தொழில்நுட்பம் மற்றும் இணையவழி அரசாங்கம் பற்றிய சவூதி அரேபியாவின் இலக்கு பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. குடிமக்கள் திருப்தியான சேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் வெளிநாடுகளில் இருந்து தொழில் நிமித்தம் சவூதி அரேபியாவில் தங்கி இருப்பவர்கள் தமது தேவைகளை இலகுவாக பூர்த்தி செய்து கொள்ள வேண்டும், மார்க்க கடமைகளுக்காக சவூதி அரேபியா செல்லும் யாத்திரிகள் தமது கடமைகளை இலகுவாக செய்து கொள்ள வேண்டும், அரசாங்க அலுவலகங்களில் சேவையை பெற்றுக் கொள்வோர் தமது வீடுகளிலிருந்தும் அலுவலகங்களில் இருந்தும் சேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விடயங்கள் அவதானி க்கப்பட்டு சவூதி அரேபியா அரசாங்கம் பல முன்னேற்றகரமான திட்டங்களை வகுத்துள்ளது.

இச்சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு பல டிஜிட்டல் பயன்பாடுகளை சவூதி அரேபியா அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தி 2023 ல் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது. சவூதி அரேபிய அரசாங்க டிஜிட்டல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி சுமார் 24 டிஜிட்டல் பயன்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, எஸ்கோ போன்ற அமைப்புக்களின் அங்கீகாரத்தை பெற்ற, இலகுவாக பயன்படுத்த முடியுமான 24 டிஜிட்டல் பயன்பாடுகள் மக்கள் பயப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவற்றில் அப்ஷிர் என்ற டிஜிட்டல் பயன்பாடு 16 சேவைகளைக் கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் பயன்பாடு 2023 89.28% வளர்ச்சி கண்டுள்ளது. “இஹ்ஸான்”என்ற டிஜிட்டல் பயன்பாடு சமூக சேவை மனிதநேய உதவிகள், ஹஜ் காலத்தில் நிறைவேற்றப்படும் உழ்ஹிய்யா போன்ற உதவி செய்யும் நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்டதாகும்.இப்பயன்பாட்டின் மூலம் 75 ஆயிரம் உழ்ஹிய்யாக்கள் இம்முறை ஹஜ்ஜில் கொடுக்கப்பட்டுள்ளன இது 2023ல் 89.40% வளர்ச்சி கண்டுள்ளது.

இதுபோன்று “ஸிஹ்ஹதீ” என்ற டிஜிட்டல் பயன்பாடு ஆரோக்கியம், நோய்கள், வைத்தியசாலை, அம்புலன்ஸ் சேவை போன்ற தேவைகளை இலகுவாக செய்து கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. இப் பயன்பாடு 86.50% வீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இவை போன்று இன்னும் பல டிஜிட்டல் பயன்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு பயனடைவோரின் திருப்தி, பயன்படுத்துபவர்களின் அனுபவம், முறைப்பாடுகளை கையாளும் விதம், தொழில்நுட்பத்தை கையாளும் விதம் போன்ற பிரதான அடிப்படைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவின் 2030 நோக்கங்களை நிறைவு செய்வதற்கு இத் தொழில்நுட்பம் பாரிய பங்களிப்பை செய்கிறது இதற்காக மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் எல்லையற்ற நிதியை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இத்தொழில்நுட்ப சேவைகள் சமூகத்தில் பல சாரர்களாலும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கும், முறைப்பாடுகளுக்கும் உடனடி தீர்வு வழங்குவதோடு பயனாளர்களின் ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்பட்டு இன்னும் இச் சேவைகள் விரிவுபடுத்தப்படும் என சவூதி அரசாங்க டிஜிட்டல் ஆணைக்குழு ( Digital Government Authority) தெரிவித்துள்ளது. சவூதி அரசாங்கம் இப்ப பயன்பாடுகளை வடிவமைத்து, அவற்றை சேவைக்கு உட்படுத்தி, மதிப்பீடும் செய்து வருகிறது. சுமார் 120 சவூதி அரச அமைப்புகளுக்கு இணையதள பக்கங்களை மேம்படுத்தல், இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அண்மையில் உலகில் முதல் முதலாக மருந்து சீட்டில் பொறிக்கப்பட்ட Barcode ய் பயன்படுத்தி மருந்துகளை பெற்றுக் கொள்வதற்காக தானியங்கி இயந்திரத்தை சவூதி அரேபியா வெற்றிகரமாக அமைத்துள்ளது. பாதையில் பிரயாணம் செய்யும் வாகனங்களின் காப்புறுதியை அறிந்து கொள்ளவும் சவூதி அரேபியா டிஜிட்டல் கண்காணிப்பை எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்துகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT