Wednesday, May 15, 2024
Home » வெளியானது ‘ஜவான்’ ட்ரெய்லர்; கொண்டாடும் இரசிகர்கள்

வெளியானது ‘ஜவான்’ ட்ரெய்லர்; கொண்டாடும் இரசிகர்கள்

by Prashahini
September 1, 2023 4:04 pm 0 comment

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’.

நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் செப். 07ஆம் திகதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் OTT, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ. 400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ப்ரிவ்யூ கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் நேற்று (31) ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஷாருக்கான் அதிரடி அக்ஷனில் கலக்கும் இந்த ட்ரெய்லரில் ‘எல்லாரும் அவனுக்கு Fan ஆயிட்டாங்க’ என்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும், இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT