Tuesday, May 21, 2024
Home » யாழில் “ஈ-குருவி நடை 2023”

யாழில் “ஈ-குருவி நடை 2023”

by Prashahini
August 3, 2023 11:05 am 0 comment

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையிலான விழிப்புணர்வை சமூக மட்டத்தில் உருவாக்கும் வகையில் “ஈ-குருவி நடை 2023” ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபயணமானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06) காலை 6.30 மணிமுதல் 9.30 மணிவரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பொதுநூலக முன்றலில் ஆரம்பிக்கும் குறித்தநடைபயணமானது, வைத்தியசாலை வீதியூடாக சத்திர சந்தியினை அடைந்து, அங்கிருந்து கோட்டை சுற்றுவட்ட வீதியூடாக மீண்டும் பொது நூலகத்தினை வந்தடையவுள்ளது.

இந்த துடிப்பான சமூக முன்முயற்சியானது உடல் உள ஆரோக்கியத்தை மேம்மடுத்த ஒவ்வொருநாளும் 10,000 காலடிகள் நடப்பதை விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் மதிப்பு கூட்டுவதற்கான ஆதரவை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஈ-குருவி நடையானது கடந்த 2020ஆம் ஆண்டுமுதல் கனடா மற்றும் இலங்கையில் சமூகம் சார்ந்தவிழிப்புணர்வினை மேற்கொள்ளும் நடையின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நடைபயணத்தில் இணைவதன் மூலம் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முகமாகவும், அதேநேரம் உள்ளூர் பொருளாதாராத்தின் மதிப்புக்கூட்டலினை ஆதரிப்பதனூடாக எங்கள் பொருண்மிய மேம்பாட்டினை வலுப்படுத்த அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். குறித்த நடைப்பயணத்தில் இணைவதற்கான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள 0761027092 தொலைபேசி இலக்கத்தோடு இணைந்துகொள்ளுங்கள் என மேலும் தெரிவித்தனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT