Home » இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தொழிலதிபர் அதானியுடன் ஜனாதிபதி சந்திப்பு

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தொழிலதிபர் அதானியுடன் ஜனாதிபதி சந்திப்பு

- இலங்கையில் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசியதாக கௌதம் அதானி தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
July 21, 2023 11:47 am 0 comment

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று (21) காலை புதுடெல்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

இந்தியாவுக்கு இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (20) இந்தியா சென்றடைந்திருந்தார்.

புதுடில்லி சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதுடில்லி விமான நிலையத்தில் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வீ. முரளிதரனினால் வரவேற்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் கௌதம் அதானிக்கும் இடையே சந்திப்பொன்று புது டில்லியில் இன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தனது சமூக வலைத்தள கணக்குகளில் (Twitter, Threads) பதிவிட்டுள்ள கௌதம் அதானி, பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையத்தின் தொடர்ச்சியான அபிவிருத்தி, 500 மெகாவாற்று காற்றாலை திட்டம், பசுமை ஜதரசனை உற்பத்தி செய்வதற்கான எமது புதுப்பிக்கத்தகு சக்தி நிபுணத்துவத்தை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட இலங்கையில் கவர்ச்சிகரமான திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியமை பெருமையளிக்கிறது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT