Friday, May 17, 2024
Home » ஜனாதிபதி இந்தியா பயணம்; அமைச்சு பொறுப்புகள் 5 இராஜாங்க அமைச்சர்களுக்கு

ஜனாதிபதி இந்தியா பயணம்; அமைச்சு பொறுப்புகள் 5 இராஜாங்க அமைச்சர்களுக்கு

by Rizwan Segu Mohideen
July 20, 2023 2:37 pm 0 comment

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (20) இந்தியா பயணமாகியுள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கின்ற காலப்பகுதியில், அவரின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புக்கள் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி,

  1. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான பிரமித்த பண்டார தென்னகோன் – பாதுகாப்பு பதில் அமைச்சராகவும்
  2. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க – நிதி மற்றும் பொருளாதர நிலைப்படுத்தல், தேசிய கொள்கைகள் பதில் அமைச்சராகவும்
  3. ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம – ஏற்றுமதி ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும்
  4. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் – தொழில்நுட்ப பதில் அமைச்சராகவும்
  5. சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் – சிறுவர், மகளிர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும்

நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT