ஜுவல்ஸ் 2019’ கண்காட்சி 14ஆம் 15ஆம் திகதிகளில் | தினகரன்

ஜுவல்ஸ் 2019’ கண்காட்சி 14ஆம் 15ஆம் திகதிகளில்

இலங்கை மாணிக்க கற்கள் வர்த்தகர்கள் சங்கம் ‘ஜுவல்ஸ் 2019’ என்ற மாணிக்க கற்கள் மற்றும் ஆபரணங்களின் வர்த்தக கண்காட்சி மற்றும் போட்டி நிகழ்ச்சியை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம்  14மற்றும் 15ஆம் திகதிகளில் நடத்தவுள்ளது. 

மாணிக்க கற்கள் மற்றும் ஆபரணங்களின் வர்த்தக கண்காட்சி மற்றும் போட்டி நிகழ்ச்சி 15வருடங்களுக்கு முன்னர் மாணிக்க கற்கள் மற்றும் ஆபரண கைத்தொழிலை ஊக்குவிக்கும் ​நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு ‘இலங்கையின் மாணிக்க கற்கள் மற்றும் கனிமங்கள்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு அது ‘ஜுவல்ஸ்’ என்று மாற்றப்பட்டது. இதற்கு முன்னர் 12கண்காட்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. 

இலங்கையில் மாணிக்க கற்கள் வர்த்தகத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தில் இலங்கை மாணிக்க கற்கள் வர்த்தகர்கள் சங்கம் 1970ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இலங்கையில் மாணிக்க கல்  கைத்தொழில் மேற்கொள்ளப்படும்  ஒரேயொரு தொழில்கள் நிறுவனம் இதுவேயாகும். ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இலங்கையில் மாணிக்க கற்கள் தொடர்பான தொழில்சார் அபிவிருத்தி நிகழ்ச்சிகள், பணிப் பட்டறைகள், கள விஜயங்கள்  மற்றும் பயிற்சி வகுப்புகளை மாணிக்கற்கள் வர்த்தக சங்கம் நடத்தி வருகிறது.  

சிறந்த படிகக் கல், புதுப்பாணியில் அமைந்த கல், சிறந்த வெட்டுடன் கூடிய கல், மாணிக்ககற்களை உள்ளடக்கிய சிறந்த ஆபரணம் மற்றும் சிறந்த மாணிக்க கல் புகைப்படம் ஆகியவை போட்டி நிகழ்ச்சியில் விருதுகளை பெறவுள்ளன.   


Add new comment

Or log in with...