ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிரான விசாரணையை துரிதப்படுத்த பிரேரணை | தினகரன்


ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிரான விசாரணையை துரிதப்படுத்த பிரேரணை

அட்டாளைச்சேனை பிரதேச சபையினால், இலங்கை ஜமாத்தே இஸ்லாமிய முன்னாள் தலைவர்  றசீத் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தி உண்மையை வெளியிடுமாறு நேற்றுமுன்தினம் (17) பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதற்கான பிரேரணையை சபையின் உப தவிசாளார் எஸ்.எம்.எம்.ஹனீபா முன்வைத்து உரையாற்ற்றுகையில், 

அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை ஜமாத்தே இஸ்லாமிய முன்னாள் தலைவர் உஸ்தாத் றசீத் ஹஜ்ஜுல் அக்பருக்கு  எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான துரித விசாரணைகளை மேற்கொண்டு கைது செய்தமைக்கான காரணத்தை வெளியிட்டு முஸ்லிம் சமூகத்தின் அச்சத்தை தெளிவுபடுத்த வேண்டும். 

ஹஜ்ஜுல் அக்பர் கைது தொடர்பாக முஸ்லிம் சமூகம் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளது. எமது நாட்டின் இறைமைக்கும், அரசியலமைப்புக்கும் எப்போதும் மதிப்பளித்து செயற்பட்டவர். 

கடந்த ஐம்பது வருடங்களாக அவரது பேச்சுக்கள், செயற்பாடுகள், எழுத்துக்கள் என்பன எந்தவொரு சந்தர்பத்திலும் நமது நாட்டின் இறை​மைக்கு எதிராகவோ, அரசியல் யாப்புக்கு முரணாகவோ அமைந்ததில்லை. 

சமூகங்களுக்கு மத்தியில் நல்லுறவினையும், இணக்கப்பாட்டினையும் ஏற்படுத்துவதற்காக கடுமையாக உழைத்தவர்.  

உஸ்தாத் றசீட் ஹஜ்ஜுல் அக்பர் விடயத்தில் நீதியாகவும், நியாமான முறையிலும் செயற்பட்டு குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார் என்று முழு முஸ்லிம் சமூகம் நம்புவதாகவும், அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென இப்பிரேணையை முன்வைக்கிறேன் என்றார். 

அம்பாறை சுழற்சி, ஒலுவில் விசேட  நிருபர்கள்


Add new comment

Or log in with...