பாராளுமன்ற தெரிவுக் குழுவின் காலம் நீடிப்பு | தினகரன்

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் காலம் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கமைய, பாராளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.  

உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழு கடந்த மே 22 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.


Add new comment

Or log in with...