Friday, April 26, 2024
Home » உலக தமிழர் பேரவை, பௌத்த பீடங்களின் தலைவர்கள் இணைந்து இமாலயா பிரகடனம் கண்டியில் வெளியீடு

உலக தமிழர் பேரவை, பௌத்த பீடங்களின் தலைவர்கள் இணைந்து இமாலயா பிரகடனம் கண்டியில் வெளியீடு

by damith
December 11, 2023 10:17 am 0 comment

உலக தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் தலைமையில் மூன்று நிக்காயாக்களினதும் பௌத்த குருமார்கள் இணைந்து இமாலயா பிரகடனம் என்ற ஒரு பிரகடனத்தை கண்டியில் வைத்து வெளியிட்டனர்.

உலக தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் யுத்த தலைமையிலான மேற்படி குழுவினர் மல்வத்தை மகாநாயக்க தேரர் வண. திப்பட்டுவாவே சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க ​தேரர், வண. வரகாகொட ஞானரத்ன தேரர்ஆகியோரையும் சந்தித்து நல்லாசிகள் பெற்றனர். புன்னர் கண்டமி குயீன்ஸ் ஹோட்டலில் ஒரு ஊடக சந்திப்பை நடத்தினர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களது மகளிர் அமைப்பின் தலைவி விசாகா தர்மதாச இதனை ஏற்பாடு செய்திருந்தார். அங்கு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது சுரேன் சுரேந்திரன் தெரிவித்ததாவது-,

டயஸ்போரா என்ற ஒரு சொல் சிங்கள மக்களுக்கு மத்தியில் பயங்கரவாதிகள் என்ற கருத்தையும் பௌத்தமத குருக்கள் என்றால் தமிழர்களது உரிமைகளை மறுப்பவர்கள் என்றும் தவறான ஒரு கருத்து நிலவுகிறது. காரணம் இரு தரப்பினரும் இணைந்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபடாத காரணத்தினால் இந்நிலைமை தோற்றம் பெற்றிருந்தது.

எனவே மேற்படி இரு தரப்பினரும் இணைந்து பல முறை இது பற்றிப் ​பேசினோம். நேபாளம், காட்மண்ட் நகரில் சந்தித்து வெளிப்படையாகப் பேசினோம். அதன் பிகாரம் இமாலாயா பிரகடனம் வெளியிடப்பட்டது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கையளித்தோம். மல்வத்தை, அஸ்கிரிய, ராமன்ய, அமரபுர முதலான நிக்காயாக்களின் தலைவர்களிடமும் கைளித்து கலந்துரையாடினோம்.

தற்போது நாம் அனைவரும் இணைந்து நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற கொள்கையில் இணைந்துள்ளோம். எஸ்ஜே.வி. செல்வநாயகம், மு. திருத் செல்வம், ஏ. அமிர்தலிங்கம், சம்பந்தன. சுமந்திரன் என பல தலைவர்கள் இது பற்றி 75 வருடங்களாகப் பேசி வருகின்றனர். இன்னும் ஒரு முடிவை எட்டவில்லை. எனவே நாம் இனியும் காலம் தாழ்த்த முடியாது.

எமது இமாலயா பிரகடனத்தில் முக்கியமாக 6 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முதலாவதாக நாட்டின் பல்வகைத் தன்மையைப் பேணுதல் என்ற அம்சத்திற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பொருளாதாரப் பிரச்சினைகளை வெற்றி கொள்வது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவதாக மாகாண மட்ட அதிகாரப்பரவலாக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நான்காவது ஒன்று பட்ட, பிளவு படாத அதிகாரம் பகிரப்பட்ட ஒரு நாடு பற்றி பேசப்பட்டுள்ளது. ஐந்தாவதாக கடந்த கால கசப்பு அனுபவங்களை மனதிற்கொண்டு அவ்வாறான ஒரு நிலை மீண்டும் ஏற்படாது பார்த்துக் கொள்வது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறாவதாக பலதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் தொடர்பாக ஏற்று அவற்றைப் பின்பற்றுவது பற்றி பேசப்பட்டுள்ளது. இந்த ஆறு அம்சங்கள் கொண்ட இமாலாயாப் பிரகடனத்தில் பின்வருவோர் கையெழுத்திட்டுள்ளனர்.

உலக தமிழ்ப் பேரவை (ஐக்கிய ராஜ்ஜியம்) சார்பாக வேலுப்பிள்ளை குகநேந்திரன், கலாநிதி சாந்தினி ஜெயராஜா, உலக தமிழ்ப் பேரவை (ஐக்கிய அமெரிக்கா), தனபாலசிங்கம் சுரேந்திரன், உலக தமிழ்ப் பேரவை (ஐக்கிய ராஜ்யம்), சிறிகாந்தன் பவகுகன் உலக தமிழ்ப் பேரவை (ஐக்கிய ராஜ்யம்), கலாநிதி கண்ணப்பன் முகுந்தன், உலக தமிழ்ப் பேரவை(அவுஸ்திரேலியா), பிரகாஷ் ராஜசுந்தரம் உலக தமிழ் பேரவை (அவுஸ்திரேலியா) ராஜ் நவரட்னசிங்கம், உலக தமிழ் பேரவை (கனடா) ஆகியோரும் வண. தேரர்களான வண. மாதம்பே அசாதி திஸ்ஸ, வண. சியம்பலாகஸ்வெவ விமசார, கிதலகம ஹேமசார, பேராசிரியர் பல்லேகந்த ரத்னசார, கலுபான பியரத்ன, நாரம்பனாவே தம்மாலோக்க, வலதர சோபித்த ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர். அத்துடன் சுரேந்திரன் மேலும் தெரிவிக்​கையில்,

இலங்கைக்கு வருகை தந்து பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியதுடன், சர்வமத தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார்.

மேற்படி பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மதகுருமார்களுடன் ஒன்று சேர்ந்து 25 மாவட்டங்களுக்கு சென்று இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்வைப்பதாகும் என்றார். அஸ்கிரிய பீட மகாநாயக்கத் தேரரை நாங்கள் சந்தித்தபோது பல விடயங்களை கூறினர்.

அதாவது சகோதரத்துவம் சமதர்மம் சமாதானம் என்ற அடிப்படையில் வேலை செய்தால் இலங்கை என்ற நாட்டில் பிரச்சினைகள் இருக்காது.

நீங்கள் இப்படி மக்களிடம் செல்லப்போவதை நான் வரவேற்கிறேன் எனவும் தெரிவித்தார். அதேபோல மல்வத்துபீட மகாநாயக்க தேரர், போர்க்காலத்தில் கூட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை சந்திப்பதற்காக ஆறு தடவை முயற்சித்ததாகவும் அதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்ததாகவும் தெரிவித்தார்.

(அக்குறணை குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT