பிரபல பாதாள குழு தலைவரின் உதவியாளர்கள் மூவர் கைது | தினகரன்

பிரபல பாதாள குழு தலைவரின் உதவியாளர்கள் மூவர் கைது

பிரபல பாதாள குழு தலைவரின் உதவியாளர்கள் மூவர் கைது-3 Underworld Member Arrested-Kadugannawa Kandy

 

பிரபல பாதாள குழு தலைவர் மாகந்துர மதூஷ் என அறியப்படும், மதுஷ் லக்‌ஷித என்பவரது உதவியாளர்கள் மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திட்டமிட்ட குற்றங்களை புரிதல், போதைப்பொருள் வர்த்தம் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்ளும் குறித்த மூவரும், கண்டி, கடுகண்ணாவ பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஒளிந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பாதாள குழு உறுப்பினர்களான ரணவக்க பெரேரா (33), ஹர்ஷ அநுர தேசப்பிரிய (35), ஹர்ஷ பிரதீப் குமார (25) ஆகியோரே இவ்வாறு கண்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹர்ஷ அநுர தேசப்பிரிய (35) எனும் நபர், கடந்த சனிக்கிழமை (09) கண்டி, மடவளை தெல்தெனிய வீதியில், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் உயிரிழந்தவர்களில் ஒருவரான 'பைலா' என அழைக்கப்படும் ருமல்ஷ இமேஷ்  மதுசங்க நவகமுவ (30) என்பவரின் பிரதான உதவியாளர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இன்று (13) கைதான குறித்த மூவரும், பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய, திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணை பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...