அக்கரைப்பற்றில் ஒசுசல; அமைச்சர் ராஜித திறந்துவைப்பு! | தினகரன்

அக்கரைப்பற்றில் ஒசுசல; அமைச்சர் ராஜித திறந்துவைப்பு!

அக்கரைப்பற்றில் ஒசுசல; அமைச்சர் ராஜித திறந்துவைப்பு-Opening Osusala at Akkaraipattu

 

அக்கரைப்பற்றில் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபன கிளை (ஓசுசல) திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (03) பி.ப. 4.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர் பைசல் காசிம் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அமானுல்லாஹ் உள்ளிட்டேர் கலந்து கொண்டனர்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் தொழில் வாய்ப்பு செயலாளருமான ஏ.ஏல். தவத்தின்  முயற்சியினால் அப்பிரதேச மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

(காரைதீவு குறூப் நிருபர் சகா)

 


Add new comment

Or log in with...