Home » சம்பியனானது 2018 அணி

சம்பியனானது 2018 அணி

by gayan
November 10, 2023 6:00 am 0 comment

அக்/ அந்நூர் பழைய மாணவர் சங்கம் அண்மையில் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 2018 சாதாரண தர பழைய மாணவர் அணி கிண்ணத்தை வென்றது. 16 பழைய மாணவர் அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் 2018 மற்றும் 2020 சாதாரண தர அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின. இதில் 2018 அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டியது. போட்டியின் ஆட்ட நாயகனாக 2020 அணித் தலைவர் என். முஹன்னத் தெரிவு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக எம்.ஆர். அக்கீல் தெரிவானார். இவர்களுக்கான வெற்றிக் கிண்ணத்தினை பாடசாலை அதிபரும், பழைய மாணவர் சங்கத் தலைவருமான ஏ.எம். அஸ்மி, பழைய மாணவரும், பாடசாலை நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான எம்.பி. கியாஸ் ஆகியோர் வழங்கிவைத்தனர்.

திராய்க்ேகணி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT