ரூ.24 இலட்சம் பெறுமதி; 4 தங்க பிஸ்கட்டுகளுடன் பெண் கைது | தினகரன்

ரூ.24 இலட்சம் பெறுமதி; 4 தங்க பிஸ்கட்டுகளுடன் பெண் கைது

சுமார் 24 இலட்சம் ருபா பெறுமதியான நான்கு தங்க பிஸ்கட்டுளை சென்னைக்கு கடத்தி செல்ல முற்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் நேற்றுக் காலை கட்டநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவரே நேற்று (09) காலை 08.30 மணியளவில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் 129 என்ற விமானம் மூலம் அவர் சென்னை நோக்கி புறப்பட ஆயத்தமான போதே கைது செய்யப்பட்டார். வழமையான சோதனை நடவடிக்கைகளின் பின்னர் விமானத்தில் ஏற முற்பட்ட போது இவரிடமுள்ள பயணப்பொதியை மீண்டும் சோதனையிட்ட போது 4 தங்க பிஸ்கட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பெண்ணை கைது செய்துள்ள விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


Add new comment

Or log in with...