Monday, June 17, 2024
Home » வங்கக் கடலில் உருவெடுக்கும் புயல்!

வங்கக் கடலில் உருவெடுக்கும் புயல்!

by mahesh
May 25, 2024 8:27 am 0 comment

வங்கக்கடலில் ரிமெல் புயல் சின்னம் உருவாகி வருவதால் சென்னைக்கு வானிலை ரீதியாக சில பாதிப்புகள் ஏற்பட உள்ளன. சென்னை மக்கள் விரும்பாத பாதிப்பாக அது இருக்க வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாட்டில் கோடை காலத்திற்கு இடையே கடுமையாக மழை பெய்து வருகிறது. அதன்படி 3 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த மழைக்கு இடையே திடீரென வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் அளவில் இந்த தாழ்வுக்கு பகுதி புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு ரிமெல் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த வாரம் இந்த தாழ்வு பகுதி புயலாக மாறி அதன்பின் டெல்டா டூ தென் மாவட்டங்கள் வரை மொத்தமாக பரவலாக மழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக்கடலில் ரிமெல் புயல் சின்னம் உருவாகி வருவதால் இந்த புயல் மேற்கு நோக்கி நகரும். இதனால் புயல் ஈரமான காற்றை எடுத்துக்கொண்டு செல்லும். இதை நிரப்ப சூடான காற்று வங்கக்கடலை நோக்கி செல்லும். இதன் காரணமாக சென்னைக்கு வெப்ப அலை மீண்டும் வரும். முக்கியமாக சென்னைக்கு மீண்டும் சூடு ஏற்படும். இந்த மாத இறுதியில் சென்னையில் மீண்டும் வெயில் இதனால் அதிகரிக்கும்.

பொதுவாக ஒரு சுழற்சி கடலுக்கு மேலே இருக்க வேண்டும். இது வெப்ப நிலை காரணமாக வலிமை அடைந்து தாழ்வு மண்டலமாக மாறும். இந்திய தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து புயல் ஏற்பட கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும்.

அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்தில் இதை விட அதிக வெப்பநிலை இருக்க வேண்டும். அந்த வெப்பநிலை இருந்தால் மட்டுமே புயலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். தற்போது கோடைகாலம் என்பதால் இந்த சூழ்நிலை சரியாக உள்ளது.

அதேபோல் கடலுக்கு நடுவே நிலத்தில் இருந்து இன்னும் நீண்ட தூரத்தில் இருந்தால் கண்டிப்பாக இது புயலாக மாறு. எவ்வளவுக்கு எவ்வளவு பூமியில் இருந்து தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் அது முழுதாக உருவாக முடியும்.

ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். இது முழுமையாக உருவாகும் முன் அது கரையை கடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல தாழ்வு மண்டலங்கள் புயலாக மாறாமல் போய் இருக்கின்றன. அதேபோல் இன்னொரு விஷயம் வறண்ட காற்று. இந்த வறண்ட காற்று பொதுவாக தாழ்வு மண்டலம் உருவாக விடாமல் தடுக்கும். வறண்ட காற்று காரணமாக தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை இழக்கும். குளிர்ந்த காற்று இருந்தால் தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடையும்.

வரண்ட காற்று என்பது தாழ்வு மண்டலத்தை செயல் இழக்க செய்யும், ஆக்ரோஷத்தை குறைக்கும் ஒன்றாகும். கடந்த வாரம் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வந்த குளிர்ந்த காற்று புயலுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது. இந்த விஷயங்கள்தான் பொதுவாக ஒரு புயல் உருவாவதற்கான சூழ்நிலையை தீர்மானிக்கும். இந்த விஷயங்கள் சாதகமாக அமைந்தால் புயல் உருவாவதற்கான ஏற்ற சூழ்நிலைகள் இருக்கும். வங்கக்கடலில் இந்த எல்லா விஷயங்களும் தற்போது புயலுக்கு சாதகமாக உள்ளது. இதனால் அந்த புயல் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT