Monday, June 17, 2024
Home » சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு Golden Visa வழங்கி கௌரவிப்பு
ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு Golden Visa வழங்கி கௌரவிப்பு

by mahesh
May 25, 2024 1:00 pm 0 comment

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்க Golden Visa வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

நடிகர்களான சஞ்சய் தத், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான், கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் Golden Visa பெற்றுள்ளனர்.

நடிகைகளான மீரா ஜஸ்மின், திரிஷா, ஜோதிகா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பாடகி சித்திரா மற்றும் இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் ஆகியோருக்கும் அமீரக அரசு Golden Visa வழங்கியுள்ளது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு Golden Visa வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கௌரவப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT