Monday, June 17, 2024
Home » இந்தியா எங்கும் பரவிக் கிடக்கும் பண்டைக்கால பௌத்த தலங்கள்

இந்தியா எங்கும் பரவிக் கிடக்கும் பண்டைக்கால பௌத்த தலங்கள்

by mahesh
May 24, 2024 12:17 pm 0 comment

இந்திய மக்கள் இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள். பௌத்த மதத்தை பின்பற்றும் மக்களும் ஏராளமாக உள்ளனர். பௌத்த மக்கள் தரிசனத்துக்காக செல்ல வேண்டிய தலங்கள் இந்தியாவில் அதிகமாக உள்ளன.

இந்தியாவில் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் குறைவாகவே இருந்தாலும், அங்கு புத்தர் பெருமானுக்கென அமைக்கப்பட்டுள்ள கோயில்கள் அதிகம்.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள புத்தர் சிலைதான் இந்தியாவில் இருக்கும் பெரிய சிலைகளில் ஒன்றாகும். இது 17 ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த புத்தர் சிலையின் உயரம் 28 அடி ஆகும்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு ஸ்தூபி கற்களால் ஆனதாகும். இதற்காகவே இது புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. 3 ஆம் நூற்றாண்டில் அசோகரால் புத்த சமயத்தை பரப்புவதற்கு கட்டப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

சார்நாத் என்ற வாரணாசியில் உள்ள ஆலயத்தில் கௌதம புத்தர் முதன் முதலில் போதனையை மக்களுக்கு போதித்தார் என்று நம்பப்படுகிறது. இதனால் இந்த ஆலயம் மற்றவற்றை விட மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இங்கு வேண்டுதல் வைத்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

அஜந்தா மற்றும் எல்லோரா குகை மஹாராஷ்டிராவில் புகழ் பெற்றது. குகை கோயிலான இங்கு வடிவமைக்கப்பட்ட புத்தரின் சிலை உலக பிரசித்தி பெற்றதாகும். ஆகையால் போகவேண்டிய ஆலயங்களில் இது முக்கியமான ஒன்றாகும்.

காஜிராஹோ என்ற மத்திய பிரதேசத்தில் உள்ள கோயில் சிற்பக்கலைக்கு பெயர் போனது ஆகும். சண்டேலா மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கோயில் ெபளத்த மற்றும் ஜெயின் சமயத்தை சேர்ந்தவர்கள் வழிபாடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

தர்மஷாலா என்பது இமாச்சல பிரதேசத்தில் உள்ள தலமாகும். இந்த நகரம் திபெத்திய மக்களை அதிகம் கொண்டதாகும்.

அடுத்ததாக தக்சன் சோலிங் கோயில் என்பது புத்த மதத்தை பின்பற்றுவர்களுக்கான ஆன்மிக மையமாக விளங்குகிறது. இமயமலை அருகில் இத்தலம் இருப்பதால் இயற்கை வளம் கொஞ்சும் இடமாக இது உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT