Monday, June 17, 2024
Home » போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களை காப்போம்!

போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களை காப்போம்!

அக்கரைப்பற்றில் தேசிய இளைஞர் வெசாக் விழா 2024

by mahesh
May 24, 2024 12:16 pm 0 comment

நாட்டில் இளைஞர் சமூகத்தினரிடையே சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், அனைத்து இன மக்களினதும் முக்கிய சமய மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை கொண்டாடுவதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் செயற்பட்டு வருகிறது. அதன் ஊடாக வேறுபட்ட கலாசாரத்தைக் கொண்ட இளைஞர், யுவதிகளுக்கு இந்நாட்டின் கலாசாரத்தை நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுள்ளது.

இதன்படி, ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், இந்நாட்டின் சிங்கள பௌத்த மக்களின் முக்கிய மதவிழாவான வெசாக் பண்டிகையை கொண்டாடுவதற்கும், பிரதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு மேற்கொண்டு வருகின்றது.

இதன்படி, தேசிய இளைஞர் வெசாக் வேலைத்திட்டம் 24 மற்றும் 25 ஆகிய தினங்களில் நாட்டில் உள்ள அனைத்து பிரதேச செயலக மட்டத்திலும் அமுல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலும் 24 மற்றும் 25 ஆம் திகதி ‘போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களைக் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் செயல்திட்டம் நடைபெறவுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் பசிந்து குணரத்ன மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோருக்கிடையில் போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களை மீட்டல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், கலந்துரையாடல் ஏற்பாடுகள் பொலிஸ் நிலையத்துடன் இணைந்ததாக நடைபெறும்.

24,25 ஆம் திககளில் பக்ப் பாடல், தாகசந்தி போன்ற நிகழ்ச்சிகளை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டிலும் இளைஞர் சேவை உத்தியோகத்தர் பீ.எம்.றியாத் தலைமையிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை போன்று நாட்டில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT