153
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் புதிய விளம்பர நிலையமொன்று நேற்று மஹரகமையில் திறந்து வைக்கப்பட்டது. இல.72 ஹைலெவல் வீதி, மஹரகம என்ற முகவரியில் நேற்று உத்தியோகபூர்வமாக இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது. லேக்ஹவுஸ் நிறுவனத்தின் நிதிப் பணிப்பாள ர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ண நாடாவைவெட்டி திறந்துவைத்தார். செயற்பாட்டுப் பணிப்பாளர் மஞ்சுள மஹகும்புர, பொது முகாமையாளர்சுமித் கொத்தலாவெல, பிரதி பொது முகாமையாளர் ( சந்தைப்படுத்தல்) சிந்தக்க யாப்பா உட்பட நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.