Monday, June 17, 2024
Home » தாக்குதல் சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு
இராஜாங்கனை மற்றும் கெக்கிராவ பகுதி;

தாக்குதல் சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு

by mahesh
May 22, 2024 12:30 pm 0 comment

இராஜாங்கனை மற்றும் கெக்கிராவ ஆகிய இரு பொலிஸ் பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் போது இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இராஜாங்கனை பொலிஸ் பகுதியில் யாய 10 கெமுனுபுர பகுதியில் கால், கை களினால் தாக்குதலுக்குள்ளான நபர் ஒருவர் இராஜாங்கனை யாய 11, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இராஜாங்கனை யாய 12, பகுதியைச் சேர்ந்த எச்.ஏ.பீ.குமார என்ற 47 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய இராஜாங்கனை யாய 10 பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கெக்கிராவ திப்பட்டுவாகம பகுதியில் தடி ஒன்றினால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நபர் ஒருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவ பொலிசார் தெரிவித்தனர்.

கெக்கிராவ செல்லையா மாவத்த பகுதியில் வசித்து வரும் நாகலிங்கம் லக்ஷ்மன்தாயன் என்ற 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கெக்கிராவ திப்பட்டுவாவ மற்றும் கெக்கிராவ ஒலம்பாவ பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடைய இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இறந்தவரின் தோட்டத்தில் இருந்த இரும்புகள் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தாக்கம் காரணமாக சந்தேக நபர்கள் இவரின் தலையில் தாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இரு சம்பவங்களுடனும் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர்டுத்தப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT