Monday, May 20, 2024
Home » ஆன்மிக வாழ்வின் அடித்தளங்கள்

ஆன்மிக வாழ்வின் அடித்தளங்கள்

by Gayan Abeykoon
May 10, 2024 10:33 am 0 comment

ன்மீக வாழ்வு என்றால் என்ன? ஆன்மீக வாழ்க்கை என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? இத் தலைப்பை சிலர் ஏற்காதிருக்கக் கூடும்.

சிலர் இதனை அந்நியமான ஒன்று என நோக்கலாம். இஸ்லாம் மார்க்கம் முன்னர் அறிந்திராத ஒன்று இது, நமது அறிவுப் பொக்கிஷங்களில் நாம் இதனைக் காணவில்லை என சொல்லவும் முடியும்.

என்றாலும் இந்த இடத்தில் நாம் நீண்ட நேரம் சிந்திக்க தேவையில்லை. ஆன்மீக வாழ்க்கை என்பதன் கருத்தை வரையறுத்துக்கொள்ள நம்மால் முடியும். ஏனெனில் இஸ்லாமிய கருத்தில் அதில் வாதப் பிரதிவாதங்கள், கருத்து வேறுபாடுகள் இல்லை. அதற்கு சூட்டப்பட்டிருக்கும் பல்வேறு பெயர்களும் தெளிவாகும் போது பல்வேறு பெயர்கள் நம்மைக் குழப்பத்துக்கு உள்ளாக்கி விடாது.

நேரடியாக சொல்வதாயின் ஆன்மீக வாழ்க்கை என்பது பல சமூகங்களிலும் சொல்லப்படுகின்றவாறு  இங்கு நாடப்படவில்லை. அதாவது இன்று மேற்குலகில் சொல்லப்படும் நவீன ஆன்மீகம் போன்றது. அதில் சில இன்று இஸ்லாமிய கீழைத்தேசங்களுக்கும் வந்துவிட்டது. அவர்கள் அந்த வழிமுறை தான் ஆன்மாவை சந்திக்கவும் அதனோடு உரையாடவும் உள்ள வழி என உறுதிகொண்டிருக்கிறார்கள். கலாநிதி முஹம்மத் ஹுஸைன் தனது நூலொன்றில் குறிப்பிடுகின்றவாறு, ‘அவை சந்தேகமின்றி ஆக்கபூர்வமான அழைப்பு அல்ல. இதற்கும் இஸ்லாம் சொல்லும் ஆன்மீகத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லாத விவகாரமாகும்.

ஆன்மீக வாழ்க்கை என்பதன் மூலம் நாம் நாடுவது சடவாத, உலகாயத வாழ்க்கைக்கு எதிர்க்கருத்தைத் தான்.

சடவாதம் இன்று உலகை ஆக்கிரமித்து இருக்கிறது. அதனைத் தேடுவதில்தான் மேற்குலக மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கிழக்குலகை அதன் ஆக்கிரமிப்பு இழுத்துப் போர்த்தி இருக்கிறது. மூளைகளையும் இதயங்களையும் அது வசியம் செய்திருக்கிறது. உடல்களையும் உறுப்புக்களையும் அது ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

சடவாத வாழ்க்கை, சடவாதத்தை அன்றி வேறெதனையும் கருத்தில்கொள்ளாது. அது இயற்கைக்குப் பின்னால் இருப்பவற்றை மறுக்கும். இந்த பிரபஞ்சத்தைப் படைத்த ஒரு இரட்சகன் இருக்கிறான் என்பதை மறுக்கும். அவன்தான் படைத்து சகலவற்றையும் தந்து நேர்வழிகாட்டினான் என்பதை மறுக்கும். அதனை அவனே பரிபாலிக்கிறான் என்பதை மறுக்கும்.

மேலும் ஏனைய விலங்கினங்களை விட்டும் மனிதனை வேறுபடுத்தும் ஆன்மா என்று ஒன்றிருப்பதை மறுத்து அவன் சற்று விருத்தியடைந்த விலங்கு என்று சொல்லும். அழிந்துபோகும் இந்த வாழ்க்கைக்குப் பின்னால் இன்னொரு வாழ்க்கை இருப்பதை, அங்கே ஒவ்வோர் ஆத்மாவும் தாம் சம்பாதித்ததை இழந்திருப்பதை, தாம் விதைத்ததை அறுவடை செய்யவிருப்பதை, செய்த நற்காரியங்கள் எஞ்சியிருப்பதை மறுக்கும். நம்மைத் தவிர்த்து பிறரிடம் உள்ள சடவாத வாழ்க்கையின் அடிப்படைகள் இதுதான்.

இஸ்லாத்தில் ஆன்மீக வாழ்க்கை என்பது முக்கியமான அடித்தளங்கள் மீது கட்டியெழுப்பப்படுகின்றது. ஆன்மீக வாழ்க்கை அத்தகைய அடிப்படைகளில் கட்டியெழுப்பப்பட வேண்டும். அவை நம்பிக்கை கோட்பாடு சார்ந்த அகீதா அடிப்படைகள், அறிவு ரீதியான அடிப்படைகள், செயல் ரீதியான அடிப்படைகள், உள உணர்வு ரீதியான அடிப்படைகள் என நான்கு அடிப்படைகளின் மீது கட்டியெழுப்பப்படும். இதுதான் இஸ்லாத்தில் ஆன்மீக வாழ்க்கை. அந்த நான்கு அடிப்படைகளின் மீதும் அமையும் போது இஸ்லாம் காட்டும் ஆன்மீக வாழ்க்கை மனிதனை அதற்குரிய இயல்பூக்கத்தோடு பலப்படுத்தும்.

​ெஷய்க் ஸியாப் (நளீமி)
வெலிகாமம்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT