Monday, May 20, 2024
Home » “வரலாறாகும் வேதாந்தி” விஷேட முத்திரை வெளியீடு

“வரலாறாகும் வேதாந்தி” விஷேட முத்திரை வெளியீடு

by Gayan Abeykoon
May 10, 2024 9:02 am 0 comment

லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான ஷேகு இஸ்ஸடீனுக்கு முத்திரை வெளியிடும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12) அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ளது.

ஷேகு இஸ்ஸடீனின் 80 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “வரலாறாகும் வேதாந்தி” என்ற பாராட்டு விழாவில் இம்முத்திரை வெளியிடப்படும்.

​ேவதாந்தியின் விடுதலைபாடிகள் ஏற்பாடு செய்துள்ள அகவை 80 பாராட்டு விழாவில், அவரது பாசறையில் வளர்ந்த பல பிரபலங்கள் உரையாற்றவுள்ளனர்.

கவிதை,நாடகம்,பாட்டு எனப் பல்வகை கலை அம்சங்களுடன் இந்தப் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அஷ்ரபுடன் இணைந்து செயற்பட்ட காலத்து அரிய படங்கள் மற்றும் அரசியலில் அவரது தடயங்களை பிரதிபலிக்கும் காணொளிகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

(ஏ.ஜீ.எம் . தௌபீக்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT