Sunday, May 19, 2024
Home » 2022 O/L பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு

2022 O/L பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு

- உத்தியோகபூர்வ இணையத்தில் பார்வையிட வாய்ப்பு

by Prashahini
May 5, 2024 5:24 pm 0 comment

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் நேற்று (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன.

மீள் மதிப்பீட்டுக்காக 49,312 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும், 250,311 விடைத்தாள்கள் மீள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான  http://www.doenets.lk அல்லது http://www.results.exams.gov.lk மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகிறது.

452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் மூன்று லட்சத்து 87,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.

நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT