Friday, May 17, 2024
Home » க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கணித முகாம்

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கணித முகாம்

by sachintha
April 30, 2024 9:31 am 0 comment

அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்திலிருந்து இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான 02 நாட்கள் கொண்ட கணித முகாம் (Maths Camp) அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் அக்கரைப்பற்று எபெக் இன்ரனேசனல் (APEC International) அனுசரணையில் பிரதி அதிபர் எஸ்.அஸ்லம் தலைமையில் நடைபெற்றது.

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுக்களுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் மூலமாக கடந்த 08 வருட கால வினாப்பத்திரங்கள் அலகு ரீதியாக தெளிவுபடுத்தப்பட்டன. இதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், ஸஹ்றா வித்தியாலயம், அட்டாளைச்சேனை மத்திய மகாவித்தியாலயம், அறபா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் ஆசிரியர்களுடன் பிரசித்திப் பெற்ற வளவாளர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று மத்திய நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT