Monday, May 13, 2024
Home » 60 வயதில் உலக அழகி பட்டம்; மகுடம் வென்ற ஆர்ஜென்டினாவின் மரிசா

60 வயதில் உலக அழகி பட்டம்; மகுடம் வென்ற ஆர்ஜென்டினாவின் மரிசா

by Prashahini
April 28, 2024 1:40 pm 0 comment

ஆர்ஜென்டினாவில் 60 வயது பெண் ஒருவர் அழகி போட்டியை வென்று உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் 60 வயதில் இயல்பாக செயல்படுவதே வியப்பாக பார்க்கப்படும் சூழலில், உடலையும், மனதையும் ஒருங்கே ஒரு நிலைப்படுத்தி அழகி போட்டியில் பட்டத்தை வெல்வது என்பது சாதாரணமான விடயம் கிடையாது.

இந்த ஆண்டு ஆர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் 60 வயதான Alejandra Marisa Rodriguez என்ற பெண் வெற்றி பெற்றுள்ளார்.

முதன்முறையாக 60 வயதில் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற பெண் என்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

மரிசா பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் தலைநகரான லா பிளாட்டாவில் வசிப்பவர்.இவர் ஒரு பத்திரிகையாளர் மற்றும் வழக்கறிஞர் ஆவார்.

இந்த வெற்றியின் மூலம், அடுத்த மாதம் நடைபெறவுள்ள மிஸ் யுனிவர்ஸ் ஆர்ஜென்டினா போட்டியில் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்த மரிசா தகுதி பெற்றுள்ளார்.

மிஸ் அர்ஜென்டினா போட்டி செப்டம்பர் 28 ஆம் திகதி மெக்சிகோவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றால் சர்வதேச அழகி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

“இது தனக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. அழகுக்கு வயது வரம்பு இல்லை, தடைகளைத் தாண்டி முன்னேற முடியும் என்பதை எல்லாப் பெண்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.” அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, உலக அழகி போட்டியில் 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT