Friday, May 3, 2024
Home » மெய்வல்லுநர் ஜாம்பவான் எதிர்வீரசிங்கம் காலமானார்

மெய்வல்லுநர் ஜாம்பவான் எதிர்வீரசிங்கம் காலமானார்

by gayan
April 20, 2024 6:00 am 0 comment

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

யாழ். பெரியவிளானில் 1933ஆம் ஆண்டு ஓகஸ்ட் 24ஆம் திகதி பிறந்த இவர், யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம், 1952ஆம், 1956ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றிருந்தார். 1958ஆம் ஆண்டு ஜப்பானில்

நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்துக்கு பாய்ந்து தனது ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.

இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்துக்கு உள்ளது.

பின்னர் 1962ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கத்தை வென்றிருந்தார்.

பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது.

இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூகினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றிய இவர், யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியிருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT