Home » சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் பேச்சு

சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் பேச்சு

by Gayan Abeykoon
April 19, 2024 8:54 am 0 comment

சர்வதேச இறையாண்மை பிணைமுறி பத்திரத்தைக் கொண்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கைக்கு உதவ தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை அரசாங்கத்தினால் திருப்பிச் செலுத்தப்படாத சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சர்வதேச பிணை முறி பத்திரங்களை மறுசீரமைக்க, மே மாதத்தின் நடுப்பகுதிக்குள் முதலீட்டாளர்களுடன் ஒரு உடன்படிக்கையை மேற்கொள்ளும் என Bloomberg இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Standard Chartered Strategic information மேற்கோள் காட்டி, Bloomberg இணைய தளம் இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சமீபத்திய தரவுகளை தெரிவித்திருந்தது.

இலங்கையால் திருப்பி செலுத்தப்படாத 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சர்வதேச பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைக்க, மே மாத நடுப்பகுதியில் இலங்கை, முதலீட்டாளர்களுடன் உடன்படிக்கையை மேற்கொள்ளும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் சர்வதேச இறையாண்மை பிணைமுறி பத்திர உரிமையாளர்களின் பிரதிநிதிகள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும் அடுத்த சில வாரங்களில் இலங்கை மீண்டும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என Bloomberg இணையத்தளம் தெரிவித்துள்ளது.  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்ட “மேக்ரோ-இணைக்கப்பட்ட பிணைப்புகள்” தொடர்பில் சர்வதேச பிணை  பத்திரதாரர்களுடன் இலங்கையால் உடன்படிக்கைக்கு வரமுடியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்தகால மாநாட்டில் இணைந்து கொண்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதியமைச்சர் புஜி டெய்ஜோ ஆகியோருக்குமி டையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.   இந்த சந்திப்பில், கடன் மறுசீரமைப்பு செயல்முறையை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர ஜப்பானின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய பிரதி நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  இதற்கிடையில், உலக வங்கியின் தனியார் துறைக்கு சேவைகளை வழங்கும் அமைப்பான சர்வதேச அறக்கட்டளையின் பிராந்திய துணைத் தலைவர் ரிக்கார்டோ புலிட்டுடனும் நிதி இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT