Wednesday, May 22, 2024
Home » நல்லிணக்கம் சமத்துவம் நிறைந்ததே தமிழ் சிங்கள புத்தாண்டு

நல்லிணக்கம் சமத்துவம் நிறைந்ததே தமிழ் சிங்கள புத்தாண்டு

- வடிவேல் சுரேஷ் எம். பியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

by Rizwan Segu Mohideen
April 13, 2024 7:41 am 0 comment

நல்லிணக்கம் சமத்துவம் நிறைந்ததே தமிழ் சிங்களத் புத்தாண்டு. தேசிய ஒருமைப்பாடு இன ஒற்றுமை மென்மேலும் வளரவும் இந்த இனிய நன்னாளில் அனைவரும் புதிய சாதனைகளைப் படைத்தும் வெற்றிகளைப் பெற்றும் நலமுடன் வாழ எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மலையகத்தை பொருத்தவரை அபிவிருத்தியை நோக்கிய ஒரு பயணமாகவே இப் புத்தாண்டு மலரவிருக்கின்றது பல கோடி ரூபாய்க்கு அபிவிருத்தி வேலை திட்டங்கள் மலையகம் எங்கும் நடைபெற இருக்கின்றது .

மேலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகிட காணியுரிமை வீட்டு உரிமை உழைப்புக்கேற்ற ஊதியம் என அனைத்தும் அவர்களை சேர்ந்திடவும் வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து வளமாக வாழவும் வாழ்த்துகின்றேன்.

வடிவேல் சுரேஷ்
பாராளுமன்ற உறுப்பினர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT