Home » தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில், தமிழரை நியமன எம்பியாக நியமிக்க இந்திய அரசுக்கு கோரிக்கை

தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில், தமிழரை நியமன எம்பியாக நியமிக்க இந்திய அரசுக்கு கோரிக்கை

by Rizwan Segu Mohideen
April 13, 2024 7:38 am 0 comment

தமிழோடு உறவாடுவோம் என தமிழ் புத்தாண்டு சித்திரை தினத்தில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு நம் சமுதாயத்தின் சிந்தனைகள் உயர்வு பெற வேண்டும் எனவும் உலகத் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழ் சமுதாயம் மேலோங்க வேண்டுமென தெரிவித்தார்.

உலக மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் உள்ள தமிழர்கள் 12 நாடுகளில் 152 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நம் தமிழ் சமுதாயம் மனித வளம் கல்வி பொருளாதாரத்தில் உயர வேண்டும். அதேபோல் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் அரசாங்கங்கள் மூலம் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அரசாங்க சலுகைகள் போன்றவற்றை அனைத்து தமிழர்களுக்கும் சென்றடையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தந்த நாட்டின் இறையாண்மைக்கு ஏற்ப அனைத்து நாடுகளிலும் ராஜாங்க உறவை பலப்படுத்தி அதன்மூலம் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும். மேலும் தமிழர்கள் இந்திய மக்கள் தொகையில், தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் சேர்த்து 8 சதவீதத்துக்கு மேல் வசிக்கிறார்கள். அயல்நாடுகளில் மூன்று கோடியே அறுவது லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இவை அனைத்தையும் சுமூகமாக தீர்க்க வேண்டும் என்றால் இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் அரசியல் சார்பற்ற ஒரு நபரை நியமன எம்பியாக நியமித்து அதன் மூலம் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். எனவே, இந்தியாவில் அடுத்து அமையப்போகும் மத்திய அரசு அரசியல் சார்பற்ற ஒருவரை நியமன எம்.பி.யாக அமர்த்த வேண்டும் என உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT