Sunday, May 19, 2024
Home » புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட் விழா!

புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட் விழா!

by Gayan Abeykoon
April 11, 2024 3:55 pm 0 comment

எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் எதிர்வரும் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா மைதானத்தில் இந்த கிரிக்கெட் விழா நடைபெறவுள்ளது.

அணிக்கு 11 பேரை கொண்டதாக நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளில் ஒவ்வொரு வருடங்களை சேர்ந்த க.பொ.த சாதாரண தர வகுப்பு அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.

35ற்கும் மேற்பட்ட அணிகள் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள நிலையில், 20 ஆம் திகதி காலை நடைபவணியை தொடர்ந்து முதற் சுற்று போட்டிகள் நடைபெற்று 22 ஆம் திகதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் கலந்துகொள்ள பாடசாலையின் அனைத்து பழைய மாணவர்களுக்கும் பழைய மாணவர் சங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT