கண்விழித்து கவலை மறந்து
நோன்பு நோற்றோம்
கார் நிசியில் எழுந்து தினம்
தஹஜ்ஜுத் தொழுதோம்
தௌபாவும் நாட்கணக்கில்
செய்து வந்தோம் நல்ல
பேரருள் கிடைக்க
அழுது மன்றாடினோம்…
ஸகாத்தும் ஸதகாவும் அள்ளி வழங்கினோம்
சங்கை மிகு நோன்பும் நோற்று
பெருநாளும்
கொண்டாடுகிறோம்
காலமெல்லாம் நாம்பெற்ற
தக்வா பயிற்சி
கலங்கரை விளக்காக
திகழ வேண்டும்…
பாவம் மன்னிக்கப்பட்ட
பெருந்தகை நாம்
பாரினிலே இனி நாமும்
புனிதரானோம்
இனி நாமும் பாவமுமே
செய்யமாட்டோம்
பேரன்பு அல்லாஹ்வை
பிரியமாட்டோம்…
அடுத்த வருடம்
நாமிருப்போம்
நிச்சயமில்லை
ஆண்டவனே என்பிழையை
பொறுத்திடுவாயே
நோன்புக்கு நீவழங்கும் கூலியை
நிறைவாக
தந்துவிடு
யா ரஹ்மானே…
தோப்பூர்.எஸ் சிறாஜுதீன்
ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர்
(நற்பிட்டிமுனை தினகரன் நிருபர்)