Thursday, May 16, 2024
Home » கண்டுபிடிப்பை நிகழ்த்திய பீட்டர் ஹிக்ஸ் காலமானார்
‘கடவுளின் துகள்’

கண்டுபிடிப்பை நிகழ்த்திய பீட்டர் ஹிக்ஸ் காலமானார்

by Gayan Abeykoon
April 11, 2024 11:11 am 0 comment

பிரிட்டனின் பிரபல இயற்பியலாளரான பீட்டர் ஹிக்ஸ் (Peter Higgs) தனது 94ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.

‘கடவுளின் துகள்’ அல்லது ‘ஹிக்ஸ் போஸான்’ (Higgs Boson) என்று அழைக்கப்படும் மனித வரலாற்றில் முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியமைக்காக இவர் உலகப் புகழ் பெற்றார்.

பிரபஞ்ச உருவாக்கத்தில் இத் துகள் முக்கிய பங்காற்றியதாக அறிவியலாளர்கள் கூறுவதால், இதனை கடவுளின் துகளென்று அழைக்கின்றனர்.

கடவுளின் துகள் தொடர்பாக 1964ஆம் ஆண்டே இவர் கோட்பாட்டை வகுத்திருந்ததுடன், இவரின் கோட்பாடு சுமார் 49 ஆண்டுகள் கழித்து அதாவது 2012ஆம் ஆண்டு அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு மேற்கொண்ட சோதனையில் உறுதியானது.

இதனைத் தொடர்ந்து குறித்த கண்டுபிடிப்புக்காக 2013ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பெல்ஜியத்தை சேர்ந்த இயற்பியலாளர் ஃபிராங்கோயிஸ் எங்லெர்ட்ருடன் இணைந்து அவர் பெற்றுக்கொண்டிருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT