Thursday, May 16, 2024
Home » கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர் மரணம்
தரமற்ற Human Immunoglobulin ஊசி மருந்து செலுத்திய

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர் மரணம்

by sachintha
April 9, 2024 6:00 am 0 comment

நளிந்த திஸ்ஸ PC மாளிகாகந்த மாஜிஸ்திரேட் முன்னிலையில் நேற்று தெரிவிப்பு

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மூவர் தரமற்ற Human Immunoglobulin ஊசி மருந்தை பெற்றுக்கொண்ட பின் மரணமடைந்துள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ததிஸ்ஸ மாளிகாகந்த மாஜிஸ்திரேட் நீதவான் லோச்சனி அபேவிக்கிரம முன்னிலையில் நேற்று தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி, அந்த விடயத்தை சமர்ப்பித்து இந்த விடயங்களை மேற்படி வழக்கில் உள்வாங்குமாறு கேட்டுக் கொண்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விஷேட மருத்துவர் ஜெ. இப்ராஹிமின் பொறுப்பிலுள்ள 16ஆம் இலக்க வார்ட்டில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட உதய பெரேரா, ஜோயோனிகா அபேவர்தன, மற்றும் அசோக்க பலிசேன ஆகிய மூன்று நோயாளிகளும் மேற்படி தடுப்பூசியை பெற்றுக் கொண்டதன் பின்னர் கடும் சுகவீனத்துக்குள்ளாகி மரணம டைந்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதன்போது சட்ட மாஅதிபரை பிரதிநிதித்துவப்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜராகி விடயங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வழக்கு தினத்தில் இந்த சிவில் அமைப்பு மூலம் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்ட இந்த ஆவணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் அந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மரணமடைந்துள்ள ஒரு நோயாளி மேற்படி ஊசி மருந்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன் கடும் நோய்க்கு உள்ளாகியதன் பின்னர் மருத்துவர்கள் அவரின் உயிரை பாதுகாத்துள்ளனர்.எனினும், அதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகவும் அதன் போது உடனடியாக டாக்டர்கள் சம்பந்தப்பட்ட மருந்தை பாவனையிலிருந்து நீக்கியுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டுக்கு கொள்வனவு செய்துள்ள Human Immunoglobulinமற்றும் புற்றுநோய்க்கான மருந்தான ‘றிடொக்ஸ்டெஜ்’ ஆகிய மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தவர்கள் அல்லது இன்றுவரை நோயாளிகளாக உள்ளவர்கள் தொடர்பில் அறிக்கையொன்றை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்துக்கு வழங்குமாறும் அதேவேளை, எதிர்வரும் வழக்கு தினத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி அந்த அறிக்கை தொடர்பான விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்துக்கு தெளிவுபடுத்தினார். இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபரான அயுசுலேற் பயோடெக் பார்மா நிறுவனத்தின் உரிமையாளரான சுகத் ஜானக்க பெர்னாண்டோ மூலம் டெண்டர் முறைமையின் பின்னர் மருத்துவ விநியோகப் பிரிவுக்கு பெற்றுக்கொடுத்துள்ள மேற்படி மூன்று ஊசி மருந்துகளும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டதா? அவ்வாறானால் அந்த மருந்துகள் எந்தெந்த வார்ட்டுகளுக்கு அனுப்பப்பட்டன? அந்த மருந்துகளை வழங்கிய பின்னர் ஏதாவது கடும் நோய் அல்லது அந்த நோயாளிகளில் மாற்றங்கள் ஏற்பட்டதா என்றும் அத்துடன் நோயாளிகள் மரணமடைந்துள்ளார்களா என்றும் அதேவேளை இன்றும் எவரும் நோயாளிகளாக காணப்படுகின்றனரா? அவ்வாறானால் அந்த நோயின் ரகம் என்ன? அதுதொடர்பிலான விசேட தன்மையென்ன? மரணமடைந்தவர்கள் இருப்பார்களாயின் அவர்களது மரண விசாரணை அறிக் கை மற்றும் நோயாளியின் தொலைபேசி இலக்கம், முகவரியுடன் முழுமையான அவரது விபரங்கள் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்திற்கு வழங்கப்படவேண்டுமெனவும் சுகதார சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு அது வழங்கப்பட்டுள்ளதா என்றும் பிரதிசொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT