Monday, May 20, 2024
Home » பஸ் மோதியதில் மாணவன் படுகாயம்

பஸ் மோதியதில் மாணவன் படுகாயம்

by sachintha
April 9, 2024 9:51 am 0 comment

வவுனியா, பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் பாடசாலைக்கு சென்ற மாணவன் நேற்று காலை பஸ் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பத்தினியார் மகிழங்குளம் நோக்கி வந்த பஸ், அதே திசையில் புதுக்குளம் பாடசாலைக்கு சைக்கிளிலில் சென்ற மாணவனை மோதியமையால் மாணவன் படுகாயமடைந்தார்.

காயமடைந்த மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(வவுனியா விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT