Sunday, May 19, 2024
Home » இந்தியாவின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிட இடமில்லை

இந்தியாவின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிட இடமில்லை

by Rizwan Segu Mohideen
April 4, 2024 6:26 pm 0 comment

இந்தியாவின் உள்விவகாரங்களில் வெளியார் எவரும் தலையிட அனுமதிக்கப்பட மாட்டாது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதுடில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து ஜேர்மனியும் அமெரிக்காவும் விடுத்துள்ள அறிக்கை குறித்தே இந்திய வெளிவிவகார அமைச்சு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை அமெரிக்காவின் இந்தியாவுக்கான பதில் பிரதி பிரதம தூதுவரை வரவழைத்து தமது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, சக ஜனநாயக நாடுகளான ஜேர்மனியும் அமெரிக்காவும் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியா முன் எப்போதும் இல்லாத வகையில் மேற்கு நாடுகளுடன் கூட்டு சேர்ந்துள்ள போதிலும் அதன் இறையாண்மையில் எவரும் தலையிட அனுமதிக்காது என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT