Monday, May 20, 2024
Home » வால் நட்சத்திரம் பூமியை நெருங்குவதாக அறிவிப்பு
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும்

வால் நட்சத்திரம் பூமியை நெருங்குவதாக அறிவிப்பு

by Gayan Abeykoon
April 4, 2024 6:48 pm 0 comment

எழுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் பூமியை நெருங்கியுள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

30 கிலோமீற்றர் நீள மையப்பகுதியை கொண்ட இந்த வால்நட்சத்திரம், தற்போதே தெரியத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இதனை தொலைநோக்கியின் உதவியுடன் பார்வையிட முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.   70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரக்கூடிய ’12 பி/பொன்ஸ்-புரூக்ஸ்’ (12P/Pons-Brooks) எனும் வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருவதுடன், மேற்கு அடிவானத்தில் இது தென்படும். இந்த ஆண்டு ஜூன் மாதம் இது பூமிக்கு மிக நெருக்கத்தில் வருமெனவும், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் இந்த வால்நட்சத்திரம் 2095 இலேயே தோன்றுமெனவும், விஞ்ஞானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT