Monday, May 20, 2024
Home » அரசியலுக்கு நேற்று விடைகொடுத்தார் மன்மோகன் சிங்!

அரசியலுக்கு நேற்று விடைகொடுத்தார் மன்மோகன் சிங்!

by Gayan Abeykoon
April 4, 2024 7:58 am 0 comment

ந்திய ராஜ்யசபா எம்பியாக 33 ஆண்டுகள் பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்தியாவில் தாராளமயமாக்கலை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங். 1991- ஆம் ஆண்டு இந்தியாவில் தரளமயமாக்கல் கொள்கை அரிமுகமானது. 1991-இல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது நிதி அமைச்சராக பதவி வகித்த மன்மோகன் சிங் இதனை நடைமுறைப்படுத்தினார். அப்போது 1991 ஒக்டோபரில் முதல் முறையாக ராஜ்யசபா எம்.பியானார் மன்மோகன் சிங்.

1991-_996- இல் நாட்டின் நிதி அமைச்சராகவும், 2004- ஆம் ஆண்டு முதல் 2014- ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்தார் அவர். 1991-ஆம் ஆண்டு முதல் 33 ஆண்டுகளும் ராஜ்யசபா எம்.பியாக மட்டுமே மன்மோகன் சிங் பதவி வகித்தார். மன்மோகன் சிங்கின் பதவி காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. அவருக்கு தற்போது 91 வயது என்பதால் மீண்டும் அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படவில்லை. அந்த இடத்துக்கு தற்போது மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட 9 பேரின் ராஜ்யசபா எம்.பி பதவிக்காலமும் முடிவடைந்துள்ளது. இவர்களில் 8 பேர் தற்போதைய லோக்சபா தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். நேற்றுவரை மொத்தம் 54 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.

மன்மோகன் சிங், செப்டம்பர் 26, 1932 இல், ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்த பஞ்சாப் மாகாணத்தின் ஒரு கிராமத்தில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1948 இல் தன்னுடைய மெட்ரிக்குலேஷன் தேர்வுகளை முடித்தார். அவருடைய சிறந்த படிப்பாற்றல் அவரை பஞ்சாப்பில் இருந்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் சென்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT