Home » ஈஸ்டர் தாக்குதல்: மீண்டும் நீதிமன்றில் வாக்குமூலம் அளிக்க வேண்டியதில்லை

ஈஸ்டர் தாக்குதல்: மீண்டும் நீதிமன்றில் வாக்குமூலம் அளிக்க வேண்டியதில்லை

- சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

by Prashahini
April 3, 2024 4:26 pm 0 comment

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாளை (04) நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இதனை அறிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தாம் ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வழங்கிய கருத்து தொடர்பில் நீண்ட வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சட்டத்தரணிகள் மூலம் அவர் முன்வைத்துள்ள விடயங்களை பரிசீலித்த மாளிகாகந்த நீதவான் நாளைய தினம் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  அதன்போது தமது மனுதாரர் ஏற்கனவே குறித்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 5 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியுள்ளதால் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து அது சம்பந்தமாக முன்வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை பரிசீலித்த நீதவான், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT