Wednesday, May 15, 2024
Home » லெபனான் ஐ.நா. அமைதி காக்கும் பணியை வெற்றிகரமாக முடித்தவர்கள் நாடு திரும்பல்

லெபனான் ஐ.நா. அமைதி காக்கும் பணியை வெற்றிகரமாக முடித்தவர்கள் நாடு திரும்பல்

by Prashahini
April 3, 2024 2:22 pm 0 comment

லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் இருந்த இலங்கை இராணுவத்தின் 14 வது பாதுகாப்புப் படைக் குழு, தமது கடமை காலத்தின் நிறைவின் பின்னர் நேற்று (02) நாடு திரும்பியது.

ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்காக 2023 மார்ச் மாதம் நாட்டிலிருந்து புறப்பட்ட இந்தக் குழு, ஐநா இடைக்காலப் படைத் தலைமையகத்தில் கடமையாற்றியது. இலங்கை பாதுகாப்பு படைக் குழுவின் கட்டளை அதிகாரி கேணல் டி.பீ.ஐ.டி களுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜி தலைமையில் 10 அதிகாரிகளும் 115 சிப்பாய்களும் தங்கள் கடமை காலத்தின் நிறைவின் பின்னர் நாட்டை வந்தடைந்தனர்.

இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பி.கே.ஜி.எம்.எல். ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஜீ, மற்றும் அப்படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் கேஏடிஎன்ஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ ஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குழுவை வரவேற்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT