Saturday, May 18, 2024
Home » IPL 2024 RCB vs LSG: மயங்க் யாதவ் அபார பந்துவீச்சில் RCBஆல் அவுட்

IPL 2024 RCB vs LSG: மயங்க் யாதவ் அபார பந்துவீச்சில் RCBஆல் அவுட்

by Prashahini
April 3, 2024 9:27 am 0 comment

நடப்பு IPL சீசனின் 15ஆவது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 28 ஓட்டங்களில் வென்றுள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இந்த சீசனில் முதல் முறையாக ஆல் அவுட் ஆன அணியாக RCB உள்ளது. அத்தோடு சொந்த மைதானத்தில் இரண்டாவது போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது.

பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நேற்று (02) நடைபெற்றது. இதில் டாஸ் RCB துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த லக்னோ 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 181 ஓட்டங்கள் எடுத்தது.

182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை RCB விரட்டியது. கேப்டன் டூப்ளசி மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். 16 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து கோலி ஆட்டமிழந்தார். அவரை தமிழகத்தை சேர்ந்த மணிமாறன் சித்தார்த் வெளியேற்றினார். 19 ஓட்டங்கள் எடுத்த டூப்ளசி ரன் அவுட் ஆனார். அவர் தேவ்தத் படிக்கல் டைரக்ட் ஹிட் செய்து வெளியேற்றினார்.

தொடர்ந்து கிளென் மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் கிரீனை அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றினார் மயங்க் யாதவ். அனுஜ் ராவத் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 29 ஓட்டங்கள் எடுத்து RCBஅணிக்கு நம்பிக்கை தந்த ரஜத் பட்டிதரை அவுட் செய்தார் மயங்க்.

தினேஷ் கார்த்திக், மயங்க் தாகர், லோம்ரோர், சிராஜ் ஆகியோர் விக்கெட்டை இழந்தனர். இதில் லோம்ரோர், 13 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்தார். அவர் இம்பேக்ட் பிளேயராக பேட் செய்திருந்தார். 19.4 ஓவர்களில் 153 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது RCB. இதன் மூலம் லக்னோ அணி வெற்றி பெற்றது.

துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி இருந்தது. லக்னோ வீரர்கள் நிக்கோலஸ் பூரன் மற்றும் தேவ்தத் படிக்கல் களத்தில் துடிப்பாக செயல்பட்டு ஃபீல்டிங் பணியை மேற்கொண்டனர். இருவரும் தலா 1 ரன் அவுட் மற்றும் 3 கேட்ச் பிடித்திருந்தனர். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை மயங்க் யாதவ் வென்றார். 4 ஓவர்கள் வீசி 14 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்களை அவர் வீழ்த்தி இருந்தார்.

முன்னதாக, இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் லக்னோவின் ஓப்பனர்களாக குயின்டன் டிகாக் – கேஎல் ராகுல் களமிறங்கினர். டிகாக் ஒருபுறம் பந்துகளை பறக்கவிட, கிளென் மேக்ஸ்வெல் வீசிய 6-வது ஓவரில் 20 ஓட்டங்களில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி கிளம்பினார் கே.எல்.ராகுல். அவரைத் தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் 6 ஓட்டங்களில் விக்கெட்டானார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT