Thursday, May 16, 2024
Home » நொச்சியாகம பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்

நொச்சியாகம பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்

by sachintha
April 2, 2024 10:35 am 0 comment

அநுராதபுரம் மாவட்ட செயலாளரினால் ஆரம்பித்துவைப்பு

 

நொச்சியாகம பிரதேச செயலகத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகளை தேசிய மயமாக்கும் வேலைத்திட்டம் அண்மையில் அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தலைமையில் நொச்சியாகம பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர்;

மற்றவர்களின் பிரச்சினைகளை உணர்வுடன் பார்க்க முடிந்தால் இந்த சமுதாயம் இன்னும் அழகாக இருக்கும். எனவே, இது செய்யப்பட வேண்டிய பணி. இந்த நிறுவனத்தை நாம் பாராட்ட வேண்டும்.அதன் காரணமாகவே இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

பொது மக்களுக்கு சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனத்தின் புதிய கட்டுமானத்தில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம், அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்பதை இந்த நடவடிக்கை மறைமுகமாக எடுத்துரைக்கிறது. அத்துடன், இப்பணியை தனித்துச் செய்ய முடியாது என்பதனால் தம்மை அர்ப்பணித்துள்ள அனைவரையும் தாம் மதிப்பதாக மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த பணிக்காக இரவு பகலாக தம்மை அர்ப்பணித்த பொது மக்கள், தொழில் நுட்ப நிறுவன அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு மிகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் நொச்சியாகம பிரதேச செயலாளர் ஆர்.ஏ.எஸ்.கே. ரத்நாயக்க இதன் போது தெரிவித்தார்.இலங்கையில் உள்ளஅனைத்து பொது பணியிடங்களிலும் 2014 அக்டோபர் 16க்கு முன்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகள் இருக்க வேண்டும் என கூறப்பட்டது. அதற்காகவே நொச்சியாகம பிரதேச செயலகம் அனைத்து சேவை நிலையங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளுக்கு ஏற்ப ஊனமுற்றோருக்கான அணுகல் வசதிகளை வழங்கியுள்ளது. இதற்காக 1.2 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

திறப்பனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT