Sunday, May 12, 2024
Home » நுவரெலியாவில் ஆரம்பமான வசந்தகால கொண்டாட்டம்

நுவரெலியாவில் ஆரம்பமான வசந்தகால கொண்டாட்டம்

by Rizwan Segu Mohideen
April 1, 2024 3:08 pm 0 comment

ஒவ்வொரு வருடமும் நுவரெலியாவில் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் வசந்த கால நிகழ்வுகள் 2024ஆம் ஆண்டுக்கானது இன்று (01) காலை நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக மிகவும் கோலாகாலமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன.

வழக்கம் போல நுவரெலியா நகரில் உள்ள பாடசாலை மாணவர்களின் பேன்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடன் இந்த வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பமாகின. நுவரெலியா மாநகர சபை ஏற்பாட்டில் நுவரெலியா மாநகர சபை விசேட ஆணையாளர் திருமதி சுஜீவ போதிமான தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் இம்மாதம் முழுவதும் பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகள் போட்டிகள் என்பன ஏற்பாடாகியுள்ளன.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு , நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலகொட , பிரதேச செயலாளர் , உதவி செயலாளர், பொலிஸ் அத்தியட்சகர்கள் , முன்னாள் மாநகர சபை முதல்வர் மஹிந்த தொடபேகம மற்றும் சந்தணலால் கருணாரத்ன நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் , இராணுவ அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள், சுகாதார மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இன்று ஆரம்பமாகி இம்மாதம் 30 ஆம் திகதி வரை வசந்தகால கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.

தொடர்ந்து வரும் நாட்களில் மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தய ஓட்டப் போட்டி, குதிரைப்பந்தயம், கிரிக்கெட் சுற்றுப் போட்டி, உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி, கிறகரி வாவியில் நீர் விளையாட்டு, சேற்றில் மோட்டார் ஓட்டம், மோட்டார் சைக்கிள் தடைதாண்டல் போட்டி மற்றும் நாள்தோறும் இசை நிகழ்ச்சிகள் என களியாட்ட விழாக்களும் இந்த வசந்த கால விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

தலவாக்கலை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT