Home » எகிப்து தூதரகம் ஒழுங்குசெய்த விற்பனை கண்காட்சி கொழும்பில்

எகிப்து தூதரகம் ஒழுங்குசெய்த விற்பனை கண்காட்சி கொழும்பில்

by sachintha
March 26, 2024 10:20 am 0 comment

எகிப்து தூதரகம் One Galle Face உடன் இணைந்து ஒழுங்கு செய்த இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் துடிப்பான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் “Women Plus Bazaar” விற்பனை கண்காட்சி கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் One Galle Face Mall இல் நடைபெற்றது.

இலங்கை கைவினைஞர்கள், பெண்கள், சிறு தொழில் முனைவோர், சிறப்புத் திறன் கொண்டவர்கள் மற்றும் முதியோர்களுக்கு ஆதரவளிப்பதில் தூதரகத்தின் அர்ப்பணிப்பு, கலைத்திறன், கலாசாரம் மற்றும் கலவையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.

ஒன்பது மாகாணத்தின் கைவினைத்திறன் மற்றும் கலைத்திறன் கையால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் நேர்த்தியான கலைப்பொருட்கள் இக்காட்சிக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, தேசிய கைவினைப் பேரவையின் தலைவர் சம்பத் எரஹாபொல, மலேசிய முன்னாள் தொழிற்துறை அமைச்சர் சரவணன் மற்றும் எகிப்திய தூதுவர், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் Tareq Md Ariful Islam, ருமேனியா, பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மலேசியா மற்றும் இந்தோனேசியா தூதரகங்களின் ஆலோசகர்கள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
ருஸைக் பாரூக்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT