Monday, May 20, 2024
Home » இலங்கை டாக்காவுக்கிடையே Fits Air நேரடி விமான சேவை

இலங்கை டாக்காவுக்கிடையே Fits Air நேரடி விமான சேவை

குறைந்த கட்டணத்தில் ஏப்ரல் 16 முதல் ஆரம்பம்

by damith
March 25, 2024 8:15 am 0 comment

இலங்கை, டாக்காவுக்கிடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Fits Air விமான சேவை நடவடிக்கை எடுத்துள்ளது.

Fits Air விமான சேவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷின் டாக்கா விமான நிலையத்துக்கு சேவையில் ஈடுபடவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 16 முதல் குறைந்த கட்டணங்களில் இவ்விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

முதற்கட்டமாக வாரம் இரு முறை டாக்காவுக்கான இவ்விமான சேவைகள் நடைபெறவுள்ளன.இதற்கான ஒரு வழிக் கட்டணமாக 74,600 ரூபாவை அறவிடப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Fist Air விமான சேவை தற்போது கட்டுநாயக்காவிலிருந்து துபாய், மாலைதீவு மற்றும் சென்னைக்கு நேரடி விமான சேவைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT