Friday, November 1, 2024
Home » தனியார் கடன் தொகை ரூ. 97.5 பில்லியனிலிருந்து ரூ. 52.2 பில்லியனாக குறைவு

தனியார் கடன் தொகை ரூ. 97.5 பில்லியனிலிருந்து ரூ. 52.2 பில்லியனாக குறைவு

by sachintha
March 19, 2024 6:46 am 0 comment

இலங்கையின் தனியார் கடன் தொகை 2024 ஜனவரியில் 97.5 பில்லியன் ரூபாவிலிருந்து 52.2 பில்லியன் ரூபாவாக குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.

இலங்கையின் தனியார் கடன் டிசம்பர் மாதத்தில் 97.5 பில்லியன் ரூபாவாகவும் நவம்பரில் 62.9 பில்லியனாகவும் அதிகரித்த பின்னர், 2024 ஜனவரியில் 52.2 பில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளது. அதேசமயம் மத்திய வங்கியின் கடன் ஒட்டுமொத்த பணவோட்டமாக இருந்ததாகவும் பண ஸ்திரத்தன்மை மற்றும் இருப்புக்கள் தொடர்பான உத்தியோகபூர்வ புள்ளிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுகர்வுப் பொருள் இறக்குமதியுடன் கடன் தொகை தொடர்புபட்டிருப்பதால் பொருட்கள் விற்கப்படும்போது கடன்களும் தீர்க்கப்பட்டுவிடும்.

மத்திய வங்கிக் கடன் தொகை இந்த ஆண்டில் 58.8 பில்லியன் ரூபாவாகக் குறைந்துள்ளது. இது வெளித்துறையை ஸ்திரமாக வைத்திருக்க உதவியுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x