Monday, May 13, 2024
Home » திருக்கோணேஸ்வர மகாசிவராத்திரி பெருவிழாவின் இறுதி நகர்வலம்

திருக்கோணேஸ்வர மகாசிவராத்திரி பெருவிழாவின் இறுதி நகர்வலம்

by Prashahini
March 15, 2024 9:25 am 0 comment

தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுறை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமான் திருக்கோயில் மகா சிவராத்திரி பெருவிழாவின் இறுதி நாள் நகர்வலம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் விசேட பூஜைகளுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.

சிவராத்திரி பெருவிழாவின் இறுதி நகர்வலம் அருள்மிகு பத்தரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து கேரளா செண்டை மேளம் முழங்க, பரதநாட்டிய கலைஞர்கள் நடன நிகழ்வு, குதிரையாட்டம், பறவையாட்டம், கோலாட்டம் உட்பட பல்வேறு கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்ற நகர்வலத்தில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துக்கொண்டனர்.

அருள்மிகு பத்தரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து புறப்பட்ட தேர்பவனி கோணேஸ்வரம் ஆலயத்தை சென்றடையும் வரை ஆளுநர் செந்தில் தொண்டமான் நடை பவனியில் ஈடுபட்டார்.

இப்பெருவிழாவில் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், திருகோணமலை மாவட்ட நலன்புரி அமைப்பின் செயலாளர் குகதாசன் உட்பட பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT