Monday, May 20, 2024
Home » ஜெயிலானியில் கிரிக்கெட் போட்டி

ஜெயிலானியில் கிரிக்கெட் போட்டி

by mahesh
March 13, 2024 11:50 am 0 comment

ஜெயிலானி தேசிய பாடசாலையில் தரம் 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுடனான கிரிக்கெட் போட்டிகளில் மாணவர் அணிகளை தோற்கடித்து பாடசாலை ஆசிரியர் அணியும் பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக்குழு அணிகளும் வெற்றியீட்டின.

முதலில் நடைபெற்ற தரம் 10 மாணவர் அணி ஆசிரியர் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆசிரியர் அணி 65 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாணவர் அணி 64 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து தரம் 11 அணியுடன் நடைபெற்ற போட்டியில் ஆசிரியர் அணி 75 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாணவர் அணி 69 ஒட்டங்களைப் பெற்றது.

இப்போட்டியில் துடுப்பாட்டம், பந்து வீச்சு ஆகிய துறைகளில் இரண்டு போட்டிகளிலும் திறமை காட்டிய ஆசிரியர் வீ.அஜித் முதல் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் போட்டி தொடரின் சிறந்த வீரராகவும் தெரிவானார்.

இவருக்கான பணப்பரிசு ஆசிரியர் குழாம் சார்பில் எம்.எஸ்.எம்.மபாஸ் ஆசிரியர் வழங்கினார். இரண்டாவது போட்டியின் இறுதி ஓவரில் திறமையாக வந்து வீசிய ஏ.ஏ.எம்.பாசி ஆசிரியர் திறமையாக பந்து வீசி எதிரணியின் வெற்றி வாய்ப்பை சிதறடித்தார்.

இதனையடுத்து நடைபெற்ற தரம் 11 மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு அணிகளுக்கிடையிலான போட்டியில் நிறைவேற்றுக் குழு அணி 93 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மாணவர் அணி 89 ஓட்டங்களைப் பெற்றது.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT