Monday, May 20, 2024
Home » கிழக்கு, அம்பாந்தோட்டையில் சிறிதளவு மழை

கிழக்கு, அம்பாந்தோட்டையில் சிறிதளவு மழை

- ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை

by Rizwan Segu Mohideen
March 11, 2024 7:26 am 0 comment

– பெரும்பாலான இடங்களில் வரண்ட வானிலை

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இரத்தினபுரி , களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT