Monday, May 20, 2024
Home » வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை; ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு மேல் சம்பளம்

வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை; ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு மேல் சம்பளம்

- உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசம்?

by Prashahini
March 10, 2024 12:06 pm 0 comment

உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர்.

ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு, அங்கு வசித்தவாறு பணியாற்றுவதற்கு £150,000 அதிக சம்பளமும் வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றிற்குள் நீங்கள் பொருந்தினால் மட்டுமே உங்களுக்கு இந்த சம்பளம் கிடைக்கும்.

ஸ்கொட்லாந்தின் மேற்கு கரையோர பகுதியில் உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா ஆகிய இரு தீவுகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் மேற்குக் கரையோர தீவுப் (Western Isles) பகுதிக்கான ஆட்சேர்ப்பில் மருத்துவருக்கு வருடாந்தம் 150,000 ஸ்ரேலிங் பவுண் (ஒரு ஸ்ரேலிங் பவுண் சுமார் 390 இலங்கை ரூபா) ரூ. 5.85 கோடி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிரிட்டன் மருத்துவர்கள் வாங்கும் ஊதியத்தை விட சுமார் 40% அதிகமாகும்.

அதுமட்டுமன்றி அங்கு சென்று தங்குவதற்கான ஆரம்பத் தொகையாக £10,500 (சுமார் ரூ. 40 இலட்சமும்), கஷ்டப்பிரதேச உதவித் தொகையாக கொடுப்பனவாக £5,500 (ரூ.21 இலட்சம்), பணிக்கொடை ரூ. 6 இலட்சம் என தனித்தனியாக வழங்கப்படும். அதன்படி மொத்தாமாக ஒரு மருத்துவருக்கு வருடாந்தம் £150,000 ( சுமார் ரூ. 6 கோடி) சம்பளமாக வழங்கப்படும். இந்த சலுகைகளை பெற வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்தால் மட்டும் போதும்.

இந்த தீவில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் கிராமப்புற மருத்துவத்தில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி கடலோர பகுதிகளில் பணிபுரிந்த அனுபவமும் இருக்க வேண்டும். வெளியாட்களுக்கு மட்டுமே இங்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும்.

இதேவேளை, ஹெப்ரைட்ஸில் உள்ளக பகுதியான Rum எனும் தீவில் கின்லோச் எனும் கிராமம் காணப்படுகின்றது. தொலைதூர கிராமப் பகுதியான இங்கு வெறும் 40 பேர் மாத்திரமே வசிக்கின்றனர்.

இங்கு பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதற்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தேடி வருகின்றனர். அந்த பாடசாலையில் மொத்தம் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 5 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். அதிலும் 2 மாணவர்கள் முன்பள்ளி வகுப்பில் உள்ளனர். அவர்களின் வயது 3 மற்றும் 4 ஆகும்.

இந்த பாடசாலையில் பணிபுரியும் தலைமை ஆசிரியருக்கு ஆண்டுக்கு சுமார் £62,000 (ரூ.2.41 கோடி) சம்பளம் வழங்கப்படும். இத்துடன் £5,500 (சுமார் ரூ.21.5 இலட்சம்) உதவித் தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT